மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!

மருத்துவமனையில் நடிகை சுனைனா: ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை சுனைனா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
Published on

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் 2008இல் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் படங்கள்  நடித்துள்ளார். கடைசியாக விஷாலின் லத்தி படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. 

தெறி படத்தில் நடிகர் விஜய்யுடன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட் ஆகிய இணையத் தொடர்களிலும் நடித்துள்ளார். 

நேரம், பிரேமம் படத்தில் துணைக் கதாபாத்திரமாக நடித்த அனந்த் நாக் உடன் சுனைனா நடித்த ரெஜினா கலவையான விமர்சனங்களையே பெற்றன. 

இந்நிலையில் நடிகை சுனைனா தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பதிவில், “எனக்கு சிறுது காலம் அவகாசம் கொடுங்கள்... நான் விரைவில் மீண்டு வருவேன்” எனக் கூறியுள்ளார். 

தனக்கு என்ன பாதிப்பு என நடிகை சுனைனா எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அவரது புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.  “நேற்றுக்கூட கேள்வி-பதில் கேட்டீர்களே திடீரென என்னாச்சு?” எனவும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வதாகவும்  அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com