
கன்னட பிக் பாஸ் போட்டியாளர் வரதூர் சந்தோஷை கர்நாடக காவல் துறை கைது செய்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல் கன்னடத்தில் பிக் பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வருகிறது.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வரதூர் சந்தோஷ் புலிநகம் இருக்கும் சங்கிலியை அணிந்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்சையானது.
இந்த நிலையில், கர்நாடக காவல் துறையினர் பிக் பாஸ் வீட்டிலே வைத்து, போட்டியாளர் வரதூர் சந்தோஷை கைது செய்துள்ளனர். தற்போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டு உள்ளார்.
இதையும் படிக்க: அழிக்கக் காத்திருக்கும் சிலர்: கவலையில் பிரபல தொடர் நடிகர்!
சட்டப்படி புலிநகம் மற்றும் புலிப்பல் வாங்குவதும், விற்பதும் குற்றம் என்பதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...