
நான் செய்வதை அழிப்பதற்கு சில பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று பாக்கியலட்சுமி தொடர் சதிஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதிஷ். இவருடைய நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை பார்க்கவே இவருக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். இவர் அவ்வபோது, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
அதன்படி, சதிஷ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் ஆசையுடனும், பெரும் எதிர்பார்ப்புடனும் நடிக்க ஒத்துக்கோண்ட ஒரு ரோல். எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்துடன் முடியும் என்று வாழ்க்கை மீண்டும் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கு. நான் என்னதான் சிறப்பாக செயல் செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: வாணி போஜன், பிரியா பவானி வரிசையில் சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி!
சதிஷ் பதிவிற்கு, அவருடைய ரசிகர்கள் ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...