விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் குரலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்பாடல் துள்ளல் இசைப் பாடலாக உருவாகியுள்ளது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.
இதையும் படிக்க: ஜெயிலர் வெற்றி: அனிருத்துக்கு காசோலை பரிசளிப்பு!
யூடியூப்பில் 110 மில்லியன் (11 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனாமாடியுள்ளார்கள். 2 மாதங்கள் ஆகியும் இந்தப் பாடலின் வைஃப் ரசிகர்களிடம் இருந்து அகலவில்லை.
இந்நிலையில் நா ரெடி பாடலில் அசல் கோளாறு பாடிய பகுதிக்கு நடிகை அதிதி ஷங்கர் தனது காரில் அமர்ந்தபடி வைஃப் ஆகியுள்ள விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த விடியோவிற்கு அசல் கோளாறும் கமெண்ட் செய்திருந்தார். இணையத்தில் வைரலாகியுள்ள இந்த விடியோ 2 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவரதன், ராம்குமார் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார்.

லியோ திரைப்படம் அக்.19ஆம் நாள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



