தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தனுஷ் 50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் வில்லனா?

தனுஷ் 50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவாவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் அவரை அணுகியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published On :

தனுஷ் 50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவாவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் தனுஷ் அவரை அணுகியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ்  நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில், தனுஷ் 50 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க, நடிகர் தனுஷ் அணுகியதாக நேர்காணல் ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். 

அவர் கூறுகையில், “தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அவர் அழைத்தார். நான் எப்படி வில்லன் என கேட்டதற்கு, வடசென்னை மொழி உங்களவுக்கு எவராலும் பேச முடியாது என கூறினார். என்னால் நோட்ஸ் இல்லாம பாடவே முடியாது, வசனம் எப்படி பேசுவது” என கூறி நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.