தீபாவளி பட்டாசு வெடிப்பு: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னை மணலியில் காற்றுத் தர குறியீட்டு 246 ஆக பதிவு.

புகையால் காற்று மாசு அதிகரித்த நிலையிலும், மெட்ரோ ரயில் புறப்பட்டுச் செல்லும் காட்சி. - கோப்புப்படம்
தீபாவளியின்போது, பட்டாசு வெடிப்பால் சென்னை மணலியில் அதிகபட்சமாக காற்றுத் தர குறியீட்டு 246 ஆக பதிவாகியுள்ளது.
தமிழக அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, கடந்த ஆண்டைப் போலவே பசுமைப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்தை காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளியின்போது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புற காற்றின் மாசு தர அளவையும் மற்றும் ஒலி மாசு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, சென்னை மணலியில் காலை நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 245 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ராயபுரத்தில் காற்றின் தரக் குறியீடு 153 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
அரும்பாக்கம், கொடுங்கையூரில் உள்ளிட்ட பகுதியில் திருப்திகரமான அளவில் காற்றின் தரம் பதிவாகி உள்ளது.
தீபாவளி திருநாளையொட்டி அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
Summary
During Diwali, the Air Quality Index (AQI) in Manali, Chennai, reached a maximum of 246, driven by the bursting of firecrackers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


