இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படம் நாளை (செப்டம்பர் - 7) வெளியாகவுள்ள நிலையில், இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனிருத் இசையில் இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இதையும் படிக்க | அசலான சந்திரமுகியே கங்கனாதான்: ராகவா லாரன்ஸ்
சமீபத்தில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில், இந்திய அளவில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, நேற்று(செவ்வாய்க்கிழமை) வரை முதல்நாள் காட்சிகளுக்காக 7.5 லட்சம் டிக்கெட்களுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஜவான் முதல்நாளிலேயே ரூ.100 கோடி வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஷாருக்கானின் பதான் படத்தைப்போல் இப்படமும் ரூ.1,000 கோடி வசூல் குவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

