அசலான சந்திரமுகியே கங்கனாதான்: ராகவா லாரன்ஸ் 

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் கங்கனா நடிப்பு குறித்து பேசியுள்ளார். 
அசலான சந்திரமுகியே கங்கனாதான்: ராகவா லாரன்ஸ் 
Updated on
1 min read

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மேலும், இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை(செப்.15) முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது. 

இதில் ஜோதிகா நடித்த சந்திரமுகி கதாபாத்திரமாக தேசிய விருது வென்ற நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புள்ளது. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது: 

எல்லோரும் ஜோதிகா மேடம் மாதிரியே கங்கனா மேடம் நடித்துள்ளாரா எனக் கேட்கிறார்கள். ஜோதிகாவையும் கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. எனெனில் ஜோதிகா மேடம் தன்னை சந்திரமுகியாக நினைத்து நடித்துள்ளார். ஆனால் இங்கு கங்கனா மேடம்தான் ஒரிஜினல் சந்திரமுகியாக நடித்துள்ளார். சிறந்த நடிப்பினை கங்கனா ரணாவத் வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com