
நடிகர் மாரிமுத்து
சில நாள்களுக்கு முன்பு, எதிர்நீச்சல் சீரியலில் மாரடைப்புக் குறித்தும் தனக்கு ஏதோ ஒரு கெட்டது நடக்கப் போகுது என்று எச்சரிப்பதாகவும் ஆதி குணசேகரனாக நடித்திருந்த மாரிமுத்து வசனம் பேசியிருந்தார்.
தொலைக்காட்சி சீரியலில் அவர் பேசிய வசனமும், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்திருப்பதையும் ரசிகர்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலை தொடர்ந்து பார்த்து வருவோர், மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க.. இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மரணம்
ஒரு சில நாள்களுக்கு முன்பு, எதிர்நீச்சல் சீரியலில் காருக்கள் உட்கார்ந்து கொண்டு ஆதி குணசேகரன் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறுகிறார்.
அந்த வசனம் இவ்வாறு செல்கிறது.. அடிக்கடி நெஞ்சு வலி அழுத்துது. அப்போ அப்போ வலி வருது.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு: தட்டுகளை அலங்கரிக்கும் மசால் தோசை உள்பட 500 வகை உணவுகள்
இது உடம்பில் வரும் வலியா, மனசில் வரும் வலியானு தெரியல. ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு எனக்குத் தோணுது. அதுதான் ஏதோ எச்சரிக்கை கொடுக்குதுன்னு தோணுது.
#Marimuthu pic.twitter.com/r3suREzNLE
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) September 8, 2023
ஏதோ கெட்டது நடக்கப்போகுதுன்னு தோணுதுபா எனக்கு. அது தான் நெஞ்சு வலி போல வந்து காட்டுது. நெஞ்சு வலி வந்து மணி அடிச்சிக் காமிக்குது என்று உண்மையில், ஒருவர் தனக்கு நெஞ்சு வலி வந்து அச்சத்தில் பேசுவது போல உணர்ச்சிவசப்பட்டு வசனம் பேசி நடித்திருந்தார்.
ஆனால், அவர் சொன்னது போலவே, இன்று காலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருப்பது, சீரியலில் அவர் பேசியதும், உண்மையில் நடந்துவிட்டதே என்று ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.