

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.3) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா?
படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு (செப்.15) வெளியாக உள்ளது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தின் 4ஆவது பாடலான 'கருப்பண சாமி' பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. இதன் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது:
மார்க் ஆண்டனி படத்தில் சாமி பாடல் படமாக்கும்போது பல பிரச்னைகள் ஏற்பட்டன. பின்னர் ஐயனாருக்கு பூஜை போட்ட பிறகுதான் படப்பிடிப்பு முடிந்தது. ஐயனார் சாமி போல இருப்பவர் நடிகர் ராஜ்கிரண் சார் ஒருவரே. மார்க் ஆண்டனியின் 4வது பாடலை வெளியிட தகுதியான நபர் இவர்தான்.
ஒரு முறை படப்பிடிப்பின்போது உணவில் அதிகமாக முடி இருப்பதாக எனது அசிஸ்டண்ட் புகார் அளித்தார். உணவு சமைப்பவரை அழைத்து, ‘எனக்கு மட்டும்தான் நல்ல சாப்பாடு போடுறீயா? எல்லோரும் சமம். எல்லோருக்கும் சமமான உணவு பறிமாற வேண்டுமென விஜயகாந்த் கூறியள்ளதை என்றும் மறக்க மாட்டேன். எனக்கு என்ன சோறு போடுறியோ அதையேதான் அவர்களுக்கும் போட வேண்டும் எனக் கூறியும் இப்படி அலட்சியமாக இருக்கிறாயே’ எனக் கூறினேன். பின்னர் 5 நிமிடம் பொருத்துதான் எனக்கு நினைவு வந்தது. தலை வலித்தது; கண்கள் சிவந்திருந்தன. சுற்றி இருப்பவர்களிடம் விசாரித்தால் நான் நானாக இல்லை என கூறினார்கள். வேறு யாரோ ஒருவர் பேசியதுபோல இருந்ததாக கூறினார்கள். விட்டிருந்தால் அவரை அடித்திருப்பேன் எனக் கூறினார்கள்.
இதையும் படிக்க: நடிகர் ரமேஷ் அரவிந்த்தின் 106வது படம்!
பின்னர் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் புகாரளித்தனர். பின்னர் நடிகர் விஷால் எந்தப் பிரச்னை வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இந்த சிலை மீது கை வைக்க வேண்டுமானால் என்னை மீறித்தான் வைக்க வேண்டும் என விஷால் கூறினார்.
இதன்மூலம் விஷால் கூற வருவது அவருக்கு ஐயனார் சாமி வந்துள்ளதாகவே கூறியுள்ளார். சில ரசிகர்கள் இந்த விடியோவிற்கு, “இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.