
20 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட திரையுலகில் சாதனையாளராக திகழ்ந்து வரும் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர்.
கன்னடத்தில் இயக்குநர் பாலசந்தர் படத்தின் மூலம் அறிமுகமான இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 6 படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். கமல்ஹாசனுடன் சேர்ந்து இவரது படைப்புகள் அனைத்தும் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்கது.
இதையும் படிக்க: சச்சின் சாதனையை முறியடித்த வார்னர்!
இதையும் படிக்க: மார்க் ஆண்டனி படத்தில் சில்க்காக நடித்தவர் யார் தெரியுமா?
இவரது 100வது படம் புஷ்பக விமானம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் காப்பியடிக்கப்பட்டதாக சில சர்ச்சைகள் உருவானது.
ஷெர்லாக்ஹோம்ஸ் கதாபாத்திரங்களில் இவரும் இயக்குநர் ஸ்ரீவஸ்டாவும் இணைந்து 2 படங்களை எடுத்துள்ளார்கள். சிவாஜி சுரதகல் 1, 2 ஆகிய படங்கள் இயக்கிய இதே இயக்குநருடன் ரமேஷ் அரவிந்த் 3வது முறையாக இணைந்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய்தான் சூப்பர் ஸ்டார்; லியோவில் சிங்கிள் ஷாட் சண்டைக்காட்சி...: நடிகர் ராமகிருஷ்ணன்
படத்தின் பெயர் ‘டைஜி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரபலமான ஜோக்கர் கதாபாத்திரம் போன்று மேக்கப் போடப்பட்டுள்ளது. ரமேஷ் அரவிந்தின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் கதாநாயகனாக நடிக்கும் 106வது படமாக இந்த டெய்ஜியின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஜவான்: முதல் நாள் ரூ.129 கோடி, 2வது நாள் ரூ.240கோடி, 3வது நாள் எவ்வளவு?
நிச்சயமாக இதுவும் த்ரில்லர் கதையாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.