அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஓடிடியில் குஷி திரைப்படம் எப்போது?

குஷி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2023, 4:00 am

DIN

குஷி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஷிவ நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரும் செப்.1 ஆம் தேதி வெளியானது.

காதல், காமெடி, எமோஷனல் என தெலுங்கில் நல்ல வரவேற்பும், தமிழில் கலவையான விமரிசனமும் பெற்று குஷி திரைப்படம் 3 நாள்களில் ரூ.70.23 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ஜவான் திரைப்படம் வெளியானதால், குஷி திரைப்படம் திரையிடப்பட்டு இருந்த பெரும்பாலான திரையரங்குகளில் ஜவான் படம் திரையிடப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், குஷி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.