கேரளத்தில் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்த படம் ஆர்டிஎக்ஸ்- ராபர்ட் டோனி சேவியர். ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் ஆக்சன் படமாக இது உருவாகியிருந்தது. அதேநாளில், கிங்க் ஆஃப் கொத்தா திரைப்படமும் வெளியானது. ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ரசிகர்கள் ஆர்டிஎக்ஸ் பக்கம் திரும்பினர்.
தமிழ் சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவு மாஸ்டர்கள் அட்டகாசமான சண்டைக் காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: யாரும் காணாத வெற்றி: ரூ.1000 கோடியை நெருங்கும் ஜவான்!
மஹிமா நம்பியார் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். சண்டைக் காட்சிகள் பெரிதும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனால், அப்படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்தது. இந்நிலையில், இப்படம் உலகளவில், ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்தப் படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இன்று (செப்.24) வெளியாகியுள்ளது.