செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

கீரித்தி ஷெட்டியை நாயகியாக தேர்வு செய்ய வேண்டாமென்றேன்: விஜய் சேதுபதி 

நடிகர் விஜய் சேதுபதி நடிகை கீரித்தி  ஷெட்டியுடன் நடிக்காதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST

நடிகர் விஜய் சேதுபதி தமிழின் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கு ஹிந்திப் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். 2021இல் தெலுங்கில் உப்பெனா படத்தில் நடிகை கீரித்தி ஷெட்டியுடன் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகவும் வரவேற்பு கிடைத்த இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. 

தமிழின் புகழ்பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எழுதி இயக்கிய லாபம் படத்தில் கதாநாயகியாக கீரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் அப்போது நடிகர் விஜய் சேதுபதி கீரித்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்து விட்டார். அதற்கான காரணத்தை அவர் முன்னமே தெரிவித்திருந்தாலும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மீண்டும் கூறியுள்ளார். 

Story image

அதில் விஜய் சேதுபதி, “நான் உப்பெனா படத்தில் க்ரித்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடித்திருந்தேன். அந்தப் பட வெற்றிக்குப் பிறகு தமிழில் ஒப்பந்தமாகியிருந்தேன். படக்குழு நடிகை கீரித்தி ஷெட்டி நடிகையாக இருந்தால் நன்றாக இருக்குமென கூறினார்கள். அப்பாவாக நடித்துவிட்டு ரொமான்ஸ் செய்ய முடியாது.

Story image

உப்பெனா படத்தின் க்ளைமேக்ஸில் அவர் தயங்கும்போது நான்தான் உனக்கு எனது மகன் வயதிருக்கும். என்னை அப்பாவாக நினைத்து நடி என்று கூறினேன். நானும் கீரித்தியை மகளாகத்தான் பார்க்கிறேன். அதனால் அவரை தயவு செய்து கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டாம் எனக் கூறினேன். எனது மகள் வயதிருக்கும் அவரையும் எனது மகளாகவே பார்த்தேன்” எனக் கூறியுள்ளார். 

Story image

ஜவானுக்குப் பிறகு விஜய் சேதுபதி தனது 50வது படமான மஹாராஜாவில் நடித்து முடித்துள்ளார். ஹிந்தி மேரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியிட்டுக்கு காத்திருக்கிறது. 

Story image

நடிகை கீரித்தி ஷெட்டி தற்போது ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.