நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)
By DIN | Published On : 23rd September 2023 10:28 AM | Last Updated : 23rd September 2023 10:29 AM | அ+அ அ- |

படம்: ட்விட்டர் (எக்ஸ்)
ஐபிஎல் 2009இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணியில் ஒருநாள், டி20 போட்டிகளில் 2010இல் தேர்வானார். டெஸ்டில் 2011இல் களமிறங்கினார்.
சிஎஸ்கே அணியில் 6 ஆண்டுகள் இருந்த அஸ்வின் பல மறக்க முடியாத இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இந்திய அணியில் சிறந்த சுழல்பந்து வீச்சாளராக திகழ்கிறார். சிறந்த ஐசிசி பௌலர், ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிரண்டு இடங்களை பிடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
ஆஸி. எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகி சிறப்பாக விளையாடினார். 10 ஓவர்கள் வீசி 47 ரன்களுக்கு ஒரு முக்கியமான(லபுஷேன்) விக்கெட்டினை வீழ்த்தினார். பும்ராவிற்குப் பிறகு குறைந்த ரன்களை வழங்கினார்.
இதையும் படிக்க: இன்றுமுதல் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 655 போட்டியாளா்களுடன் இந்தியா பங்கேற்பு
281 ரன்கள் எடுத்து இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அஸ்வினுக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பௌலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆட வேண்டுமென போட்டி முடிந்தப் பிறகும் அஸ்வின் பயிற்சி எடுத்து வருகிறார். ஆல்ரவுண்டாக உலகக் கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளது. அக்ஷர் படேல் பேட்டிங் அசத்தினாலும் பௌலிங்கில் சோபிக்கவில்லை. அஸ்வின் பேட்டிங்கில் மெருகேறினால் நிச்சயமாக அவர்தான் தேர்வு செய்யப்படுவார்.
— Nihari Korma (@NihariVsKorma) September 22, 2023
இதனால்தான் அஸ்வின் தீவிரமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...