தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.
யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: குஷி: ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் குழந்தையாக இருக்கும்போது மகிழ்ச்சி அல்லது சோகமாக இருந்தாலும் சவுண்ட் ஆஃப் மியூசிக் என்ற படத்தினை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். எதார்த்தமான வாழ்க்கையில் இருந்து மாய உலகத்திற்கு என்னை அழைத்து செல்லும் . நான் வளரும்வரை அந்தப் படத்தினை பார்த்துக்கொண்டே இருந்தேன். சில படங்கள் காலம் தாழ்த்தி பார்க்கும்போது புதுமையாக இருக்கும். ஆனால் சவுண்ட் ஆஃப் மியூசிக் படம் எப்போது பார்த்தாலும் என்னை குழந்தைப்பருவத்துக்கு அழைத்து செல்கிறது. இங்கு வந்து நேரடியாக அந்தப் பகுதிகளை பார்க்கும்போது இன்னும் இளமையாக இருக்கிறது”எனப் பதிவிட்டுள்ளார்.
ராபர்ட் வைஸ் இயக்கிய சவுண்ட் ஆஃப் மியூசிக் 1965ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படமாகும். இந்தப்படம் 5 அகாடமி விருதுகள் வென்ற படமென்பது குறிப்பிடத்தக்கது.