தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அனிமல் டீசர் குறித்த புதிய அப்டேட்! 

நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டீசர் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 3:41 pm

DIN

2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழில் துருவ் விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இந்த இயக்குநரின் புதிய படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது. 

Story image

இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் ந்டித்துள்ளார் ராஷ்மிகா. இயக்குநரின் சொந்த தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Story image

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

Story image

படத்தின் டீசர் செப்.28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டீசர் 2 நிமிடங்கள் 29 நொடிகள் இருக்குமெனவும் யு/ஏ தணிக்குழு சான்றிதழையும் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.