அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடிகை த்ரிஷா சைக்கிள் ஓட்டும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.

அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து, குந்தவையாக ரசிகர்களிடம் பிரபலமானார்.

தற்போது, விஜய்யின் லியோ மற்றும் மலையாளத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக ராம் திரைப்படத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ளார். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ரோட் திரைப்படம் வரும் அக்.6ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், தனது விடுமுறை நாள்களை கொண்டாடுவதற்காக நடிகை த்ரிஷா நியூயார்க் நகரத்துக்கு சென்று இருக்கிறார்.

அங்கிருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ஓட்டும் விடியோ மற்றும் சில புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தொடர்ந்து முதலிடத்தில் எதிர்நீச்சல்: இந்த வார டிஆர்பி பட்டியல்!
நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதியின் பேச்சு அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை: திருமாவளவன்
தெய்வ தரிசனம்... பித்ருதோஷ நிவர்த்திக்கு கோடியக்கரை அமிர்தகடேசுவரர்!

தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி | TVK | DMK

பிக் பாஸ் - காமன் மேன் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு! நடுவர்களாக ஓவியா, ஆரி, ராஜு!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK



