ரஜினி - 171 படத்தில் ரன்வீர் சிங்?

நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி - 171 படத்தில் ரன்வீர் சிங்?
Updated on
1 min read

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப்படமானது.

தற்போது, ஏப்.22ஆம் தேதி ‘தலைவர் 171’ பெயர் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, படத்திற்கு ‘கழுகு’ எனப் பெயரிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வைரலாகின.

ரஜினி - 171 படத்தில் ரன்வீர் சிங்?
சண்முக பாண்டியனின் படை தலைவன் சிறப்பு விடியோ!

இந்த நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனின் கணவரான ரன்வீர் சிங் இறுதியாக நடித்த, ‘ ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி (Rocky Aur Rani Kii Prem Kahaani) படம் பெரிய வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com