நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெளியானது 3.26 நிமிட துரந்தர் 2 படத்தின் டிரைலர்!

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 படத்தின் டிரைலர் குறித்து...

News image

துரந்தர் 2 படத்தின் டிரைலர் போஸ்டர். - படம்: ஜியோ ஸ்டூடியோஸ்.

Updated On :7 மார்ச் 2026, 12:06 pm IST

நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 (துரந்தர் தி ரிவென்ச்) படத்தின் ஹிந்தி டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு, வரும் மார்ச் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான துரந்தர் திரைப்படம் உலகமெங்கும் சுமார் ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங் கதாபாத்திரம், அதில் வில்லனாக நடித்த அக்‌ஷய் கண்ணாவுக்கும் சமூக வலைதளத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இந்தியா - பாகிஸ்தான் அரசியல் ரீதியாக விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தப் படம் வலதுசாரி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், ரவி ராம்பால் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். துரந்தர் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 34 நிமிஷம் கொண்டதாக உருவாகியிருந்தது.

இதன் இரண்டாம் பாகம் 4 மணி நேரம் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டிரைலர் 3 நிமிஷம் 26 நொடிகள் கொண்டதாக வெளியாகியுள்ளது. அதனால், இந்தப் படமும் 3.30 மணி நேரமாக இருக்கலாம் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Summary

The Hindi trailer of the film Dhurandhar 2 (Dhurandhar The Revenge), starring actor Ranveer Singh, has been released and is currently going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.