திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியான துரந்தர் - 2 டீசர்!

துரந்தர்: தி ரிவெஞ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது...

News image
Updated On :3 பிப்ரவரி 2026, 12:25 pm IST

நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்துள்ள துரந்தர்: தி ரிவெஞ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடித்து கடந்த 2025 ஆம் ஆண்டு வெளியான “துரந்தர்” திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகர்கள் மாதவன், அக்‌ஷய் கண்ணா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் ஆதித்யா தார் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், இப்படத்தின் 2 ஆவது பாகமான துரந்தர்: தி ரிவெஞ் படத்தின் டீசரை படக்குழு இன்று (பிப். 3) வெளியிட்டுள்ளது. ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் மார்ச் 19 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகின்றது.

முன்னதாக, துரந்தர் திரைப்படம் பிரிவினையைத் தூண்டுவதாக ஒரு தரப்பினரும், தேசப்பற்றை வளர்ப்பதாக ஒரு பிரிவினரும் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The teaser for the film 'Dhurandhar - 2', starring actor Ranveer Singh in the lead role, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.