காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஊழல் புற்று நோயினை உருவாக்கும்: இந்தியன் 2 அப்டேட்!

கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Published On :

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியன் - 2  அறிமுக விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, சென்னை செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புச் சுவர்களில் இந்தியன் - 2 கமல்ஹாசனின் ஓவியங்கள் வரையப்பட்டு புரோமோஷனைத் துவங்கினர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும் என்ற சினிமா இடைவேளை பாணியில் ஊழல் புற்றுநோயை உருவாக்கும் உயிரைக் கொல்லும் என படக்குழு போஸ்டரில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.