பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காதலன் பெயர்கொண்ட நெக்லஸ்.. உண்மையை உடைத்த ஸ்ரீதேவி மகள்

காதலன் பெயர்கொண்ட நெக்லஸ்.. உண்மையை உடைத்த ஸ்ரீதேவி மகள்

News image
Janhvi
Updated On :10 ஏப்ரல் 2024, 9:16 am

DIN

ஷிகர் பஹாரியாவுடன் நெருங்கிப் பழகி வரும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், பகிரங்கமாகவே அவருடன் ஊர் சுற்றிவந்த நிலையில் தற்போது அவர் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது தந்தை போனி கபூரின் புதிய தயாரிப்பில் உருவான மைதான் படத்தின் திரையிடல் காட்சிக்கு வந்திருந்த ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியாவின் பெயர்கொண்ட நெக்லஸ் அணிந்து வந்திருந்தது பலரின் பார்வையிலும் படத் தவறவில்லை.

வெள்ளை நிற உடையில் கண்களைக் கொள்ளைக்கொள்ளும் அழகுடன் வந்திருந்தார் ஜான்வி கபூர். அவர் தனது தந்தை மற்றும் சகோதரர் அர்ஜூன் கபூருடன்தான் வந்திருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் பலரும், கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸ் பற்றியே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்.

தனது காதலை வெளிப்படுத்தவே இவ்வாறு அவர் நெக்லஸ் அணிந்து வந்திருந்தாகவும் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.

ஏற்கனவே, காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூர், ஷிகர் பஹாரியாவின் செல்லப் பெயரான ஷிகு, தனது செல்போனின் மூன்று ஸ்பீட் டயல்களில் ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். நிகழ்ச்சி வழங்குநர் கரன் ஜோஹர், உங்கள் செல்போனில் இருக்கும் ஸ்பீட் டயல் லிஸ்ட்டில் இருக்கும் முதல் மூன்று பெயர்களைச் சொல்லுமாறு கேட்டதற்கும், அவர் சற்றும் தயங்காமல் அப்பா, குஷு, ஷிகு என்று பதிலளித்திருந்தார்.

ஷிகருடனான தனது நெருக்கத்தை பகிர்ந்துகொள்ள எப்போதும் ஜான்வி தயங்கியதேயில்லை. அவ்வளவுஏன், தன் மகளின் காதலை, அவரது தந்தை போனி கபூரே அண்மையில் வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஷிகர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியபோது, ஜான்வி சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து எதையும் தெரிவிக்காமல் இருந்தது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.