ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரசிகர்களை கவரும் கங்குவா புதிய போஸ்டர்!

கங்குவா படத்தின் புதிய போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

News image
Updated On :14 ஏப்ரல் 2024, 12:03 pm

DIN

சிறுத்தை சிவா இயக்கும் 'கங்குவா' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்துள்ளார்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது.

தற்போது, படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா தன் டப்பிங் பணியை மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக, கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.