வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

ஈரமான ரோஜாவே தொடரின் நாயகி ஸ்வாதி, புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஸ்வாதி / நியாஸ்
ஸ்வாதி / நியாஸ்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த ஈரமான ரோஜாவே தொடரின் நாயகி ஸ்வாதி, புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கு வாரணம் ஆயிரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வாரணம் ஆயிரம் தொடரில் ஸ்வாதிக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடிக்கவுள்ளார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த புதுப்புது அர்த்தங்கள், மந்திரப் புன்னகை ஆகிய தொடரில் நாயகனாக நடித்தவர்.

விஜய் தொலைக்காட்சியில் 2022 டிசம்பர் முதல் 2023 டிசம்பர் வரை ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பானது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 2ஆம் பாகம் எடுக்கப்பட்டது.

ஸ்வாதி / நியாஸ்
மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

இதில், நடிகை ஸ்வாதி முதன்மை பாத்திரத்தில் நடித்தார். ஈரமான ரோஜாவே தொடரில் ஸ்வாதியின் நடிப்பிற்கு இரு முறை சின்னத்திரை விருதுகளும் கிடைத்தன.

அதனைத் தொடர்ந்து ஆராதனா என்ற இணையத் தொடரில் நடித்திருந்தார். அதில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, உறவுச் சிக்கல்களின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு கஷ்டப்படுவதை விட, சுதந்திரமான விருப்பமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்ணின் பாத்திரத்தில் ஸ்வாதி நடித்திருந்தார்.

ஸ்வாதி / நியாஸ்
வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

அந்த இணையத் தொடரில் ஸ்வாதியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதனிடையே நடிகர் கார்த்தியுடன் 96 இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் படத்திலும் ஸ்வாதி நடிக்கிறார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் புதிய தொடரில் நாயகியாக ஸ்வாதி நடிக்கவுள்ளார். வாரணம் ஆயிரம் எனப் பெயரிடப்பட்டுள்ள தொடரில் நடிகர் நியாஸ் உடன் சேர்ந்து நடிக்கிறார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்னத்திரையில் நாள்தோறும் ஸ்வாதியைக் காண அவரின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். திரைப்பட வாய்ப்புக்காக தொடரிலிருந்து விலகிச்செல்லும் நடிகைகளுக்கு மத்தியில், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் நடிகை ஸ்வாதி, சின்னத்திரை தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com