அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ள ரசவாதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!


கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து, வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் நாயகனாக அறிமுகமானார்.

தற்போது, அவர் ரசவாதி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை இயக்குநர் சாந்தகுமார் இயக்கி வருகிறார். 
இவர் இதற்கு முன்பு மௌனகுரு, மகாமுனி ஆகிய படங்களை இயக்கியவர்.

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!
ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

இந்த படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் சுஜிதா சங்கர், சுஜாதா, விஜே ரம்யா சுப்ரமணியன், ரேஷ்மா வெங்கடேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 
படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது.

இந்த நிலையில் படத்தின் டிரைலரைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com