நீதிபதியை பாஸ் என அழைத்த விஷாலுக்குக் கண்டனம்!

நீதிபதியை பாஸ் என அழைத்த விஷாலுக்குக் கண்டனம்!
Published on
Updated on
1 min read

நடிகர் விஷால், நீதிபதியை பாஸ் என அழைத்ததால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பதுடன் தன் படங்களைத் தானே தயாரித்தும் வருகிறார். அவரின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்திற்காக மதுரை அன்பு செழியனிடன் ரூ.21.29 கோடியைப் பெற்று அதை திரும்பச் செலுத்தாமல் இருந்தார்.

விஷாலின் நிலைமைக் கண்ட லைகா நிறுவனம் விஷாலின் கடனைச் செலுத்தியது. அதேநேரம், இக்கடனை அடைக்கும் வரை விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் அனைத்து உரிமைகளையும் லைகா நிறுவனத்திற்கே தர வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் கூறப்படுகிறது.

நீதிபதியை பாஸ் என அழைத்த விஷாலுக்குக் கண்டனம்!
அர்ஜுனனாக விரும்பும் திரௌபதி... ஜமா - திரை விமர்சனம்!

ஆனால், விஷால் தயாரித்த வீரமே வாகை சூடும் படத்தின் உரிமையை லைகா நிறுவனத்திடம் கொடுக்காததால் லைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை, நீதிபதி பி.டி.உஷா விசாரித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஆக.1) நீதிமன்றத்தில் ஆஜரான விஷாலிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, லைகா நிறுவனம் வெற்றுப் தாளில் தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக விஷால் கூறினார். உடனே நீதிபதி, ‘நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? இது சினிமா படப்பிடிப்பு அல்ல. கவனமாக பதில் சொல்லுங்கள்’ என்றார்.

நீதிபதியை பாஸ் என அழைத்த விஷாலுக்குக் கண்டனம்!
தலைக்கவசம் அணியாமல் பைக் ஓட்டிய நடிகா் பிரசாந்துக்கு அபராதம்

தொடர்ந்து, ‘சண்டைக்கோழி - 2 படம் வெளியாவதற்கு 10 நாள்கள் முன்பு பணத்தை திருப்பித் தருவதாகச் சொன்னீர்களா? என நீதிபதி கேட்டார். அதற்கு, விஷால் ‘பாஸ்’ என எதோ கூறவந்ததும், ‘பாஸ்’ என்றெல்லாம் சொல்லக் கூடாது. ஆம், இல்லை என்று மட்டுமே சொல்ல வேண்டும் என நீதிபதி கண்டித்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com