நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்துக்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.
மேலும், குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கும் என்றும் அதனைத் தொடர்ந்து தென் அமெரிக்காவில் சில நாள்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









