
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆரவ். அவரது முதல் படம் மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் சரண் இயக்கத்தில் வெளியானது.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த கலகத் தலைவன் படத்தில் ஆரவ் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித் அதிரடி சாகச காட்சிகளுக்கும் டூப் போடாமல் நடிக்கும் காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு வருகின்றன.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித்குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தீபாவளிக்கு படத்தினை வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் அஜித் குமாருக்கு முக்கிய வில்லனாக சஞ்சய் தத்தும் மற்றொரு வில்லனாக நடிகர் ஆரவ்வும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நடிகர் ஆரவ் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.