
நிஜ வாழ்க்கையில் கணவன், மனைவியான நடிகை ஸ்ரேயா அஞ்சன் - சித்து ஆகியோர் புதிய தொடரில் நாயகன், நாயகியாக நடிக்கவுள்ளனர்.
இவர்கள் நடிக்கவுள்ளத் தொடருக்கு வள்ளியின் வேலன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் இதற்கு முன்பு திருமணம் என்ற தொடரில் இணைந்து நடித்திருந்தனர்.
அப்போது இந்த ஜோடிக்குத் திருமணம் ஆகவில்லை. திருமணம் தொடரில் ஏற்பட்ட காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது.
சின்னத்திரையில் பிரபலமாக ஸ்ரேயா - சித்து ஜோடி தற்போது புதிய தொடரில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்தத் தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. வள்ளியின் வேலன் தொடருக்கான முன்னோட்ட (புரோமோ) விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.
எனினும் தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தந்தையின் அன்புக்கு ஏங்கும் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் ஸ்ரேயாவும், அவரின் வீட்டில் பணிபுரியும் நபராக சித்துவும் நடிக்கின்றனர்.
கணவனும் மனைவியும் சேர்ந்து நடிப்பதால் இத்தொடரில் இருவரின் நடிப்பும் கச்சிதமாக அமையும் என்றும், காதல் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஸ்ரேயாவும் சித்துவும் இதற்கு முன்பு சேர்ந்து நடித்திருந்த திருமணம் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், கணவன், மனைவியான பிறகு நடிக்கும் வள்ளியின் வேலைன் தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.