ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில், அண்மை காலமாக அபிஷேக் பச்சன்(48) - ஐஸ்வர்யா ராய்(50) தம்பதியினரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்ற தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில், இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் திருமண விருந்துக்கு சென்றிருந்ததையும், மறுபுறம் இத்திருமண விழாவுக்கு அபிஷேக் பச்சன் தனியாகச் சென்றிருந்ததையும் காண முடிந்தது.
இந்த நிலையில், பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை காணச் சென்ற அபிஷேக் பச்சன், அங்கே நீரஜ் சோப்ராவை பார்த்தது, மைதானத்தில் வீரர்களை உற்சாகப்படுத்தியது, ஒலிம்பிக் மைதானத்தில் நம் தேசியக் கொடியைக் கண்டது பெருமைமிகு தருணமாக அமைந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், பார்வையாளர்கள் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதைக் குறித்து ஏதேனும் கேள்வி கேட்காமலும், கருத்து தெரிவிக்காமலும் இருப்பதற்காக ‘கமெண்ட்ஸ்’ பிரிவை நீக்கிவிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த இன்ஸ்டா பதிவால் பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி மக்கள் கட்சி இணையதளம், இன்ஸ்டா பக்கங்கள் ஹேக்!

கான்ஸ் திரைப்பட விழா! டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராயின் புடவைகள்!
உறவினா் கொலையில் தொடா்புடையவரை பிணையில் வந்து கொன்ற இளைஞா் கைது

டெக்ஸ்லாவில் அபிஷேக் பச்சன்?
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



