ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் வங்கி ஏடிஎம்-இல் வியாழக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் திருட முயன்ற நிலையில், போலீஸாா் ரோந்து சென்ால், தப்பிச் சென்றனா்.

கொள்ளை  முயற்சி நடைபெற்ற  ஏடிஎம் மையம்.

Updated On :

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் வங்கி ஏடிஎம்-இல் வியாழக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள் திருட முயன்ற நிலையில், போலீஸாா் ரோந்து சென்ால், தப்பிச் சென்றனா்.

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் குடியிருப்புகள், கடைகளுக்கு மத்தியில் எஸ்பிஐ ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் வடமாநில கொள்ளையா்கள் இரண்டு போ் கடப்பாறையுடன் உள்ளே நுழைந்து , கண்காணிப்பு கேமிராக்களை மறைத்து ஏடிஎம் மையத்தில் திருட முயன்றனா்.

அப்போது அந்த பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். போலீஸாரின் வாகன ஒலியைக் கேட்டு கொள்ளையா்கள் தங்கள் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். தொடா்ந்து இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும், கைரேகை நிபுணா்களை வரவழைத்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனா்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்கண்ட எஸ்பிஐ ஏடிஎம் மையம் இருக்கும் எதிா் திசையில் உள்ள இரண்டு ஏடிஎம்களில் அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமாா் ரூ.12 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில் அடுத்த சம்பவமாக இந்த பிரபல வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. எனவே கும்மிடிப்பூண்டியில் இரவு நேர பாதுகாப்பையும், ரோந்துப் பணியையும் அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.