வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

கொட்டுக்காளி டிரைலர்!

நடிகர் சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2024, 11:28 am IST

நடிகர் சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'.

நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

பெர்லின் உள்ளிட்ட சில சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்க வெளியீடாக இப்படம் வருகிற ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அன்னா பென்

அன்னா பென்

சிறப்புத் திரையிடலில் கொட்டுக்காளி படத்தைப் பார்த்த பல இயக்குநர்கள் பாராட்டி வருகின்றனர். முக்கியமாக, ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், ‘கொட்டுக்காளி ஒரு மாஸ்டர்பீஸ்’ எனப் புகழ்ந்துள்ளார்.

வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்று இப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.