மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ரசிகர்களை ஈர்க்கும் டீஏஜிங் விஜய்!

நடிகர் விஜய் நடித்த கோட் படத்தின் டிரைலர் கவனம் பெற்று வருகிறது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 2:13 pm

நடிகர் விஜய் நடித்த கோட் படத்தின் டிரைலர் கவனம் பெற்று வருகிறது.

விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஆக்சன், டீஏஜிங் காட்சிகள் படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

அதேநேரம், டிரைலரில் இடம்பெற்ற இளம் வயது விஜய்யின் டீஏஜிங் தோற்றமும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. சிறுவயதில் விஜய் எப்படி இருந்தாரோ, கிட்டத்தட்ட அதே முகச்சாயலைப் பயன்படுத்திருக்கின்றனர்.

திரைக்கதையில் முன்பின் நிகழும் நான்லீனியர் கதையாகவே இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.