சரிடா இப்ப என்ன... வைரலான சுனைனா பதிவு!
நடிகை சுனைனா பதிவு குறித்து...

சுனைனா
நடிகை சுனைனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிகம் கவனம் பெற்று வருகிறது.
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா மாசிலாமணி, திருத்தணி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானார். இறுதியாக, இவரின் நடிப்பில் ரெஜினா திரைப்படம் வெளியானது.
இதற்கிடையே, தகவலின்படி, துபையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரைத் திருமணம் செய்ய இருந்தார். அவரும் சுனைனா பதிவிட்டதைப் போன்று இரு கைகளில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து, நடிகை சுனைனாவும் யூடியூபர் காலித் அல் அமெரியும் அவரவர் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை நீக்கினர். இதனால், இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு சேலை அணிந்த புகைப்படங்களைச் சுனைனா இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர், “நீங்கள் பார்ப்பதற்கு என் முன்னாள் காதலி போல் உள்ளீர்கள்” எனக் கூற, அதற்கு சுனைனா, நடிகர் கருணாஸின் நகைச்சுவை மீம்-ஆன ‘சரிடா, இப்ப என்ன?’ புகைப்படத்தைப் பதிலாகக் கொடுத்தார்.
சுனைனாவின் இந்த ஜாலியான பதிலை எதிர்பாராத ரசிகர்கள் ஆயிரக்கணக்கான லைக்ஸ்களை கொடுத்து வருகின்றனர். இதனால், இப்பதிவு பலரிடமும் வைரலாகியுள்ளது.
Actress Sunainaa's Instagram post is garnering a lot of attention.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


