உருவானது முரசு புயல்! வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே! வரலாற்றை மாற்ற வேண்டாம்: திமுக ஞானேஷ் குமார் பதவி நீக்கம்: தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி!ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்

நான் ஹீரோயினா? ரசிகைக்கு அஞ்சனா ரங்கன் பதில்!

தொகுப்பாளர் அஞ்சனா ரங்கன் பதிவு கவனம் பெற்றுள்ளது...

அஞ்சனா ரங்கன்

Updated On :

தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனின் பதிவு சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

சென்னையைச் சேர்ந்த அஞ்சனா கல்லூரிப் படிப்பை முடித்ததும் 2008 ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்த வெற்றியே அவர் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கியது.

சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொழுதுபோக்குப் பிரிவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இவரின் கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், வாழ்த்துகள், ஃப்ரியா விடு ஆகிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமடைந்தன. தொகுப்பாளராக 18 ஆண்டுகளை நிறைவு செய்தவர், தற்போது திரைப்பட புரமோஷன் நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ரசிகை ஒருவர், “நாயகியாவதற்கான அனைத்து தகுதிகளும் கொண்டவர். தமிழ் சினிமா காத்திருக்கிறது. மேடம், விரைவில் அதையும் செய்யுங்கள். உங்களைப் பெரிய திரையில் காண நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.

இந்தப் பதிவைப் பகிர்ந்த அஞ்சனா ரங்கன், “ஹாஹா... ஆர்வமே இல்லையே... இருந்திருந்தால் வாய்ப்புகள் வந்த முதல் 6 மாதங்களிலேயே அதனைச் செய்திருப்பேன். 18 ஆண்டுகளாக ஏன் காத்திருக்கப் போகிறேன்? அப்பறம், அந்த வயதையும் கடந்து வந்துவிட்டேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

A post by presenter Anjana Rangan is gaining attention on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.