புதிய தயாரிப்பு நிறுவனத்தில் முதல் திரைப்படம்... வெற்றிக்குக் காத்திருக்கும் சூர்யா!
இந்தாண்டில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சூர்யா....

நடிகர்கள் சூர்யா, நஸ்லன்
நடிகர் சூர்யா நடித்த சீன் திரைப்படம் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தன் முதல் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் வாயிலாக நிறைய திரைப்படங்களைத் தானே தயாரித்து நடித்ததுடன் கார்த்தி, ஜோதிகாவின் படங்களையும் தயாரித்தார். இதன் தயாரிப்பில் இறுதியாக ரெட்ரோ வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் எதிர்பார்த்த வெற்றியை இப்படம் பெறவில்லை.
தொடர்ந்து, 2டியில் நேரடியாக நடிக்காமல் கருப்பு மற்றும் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படங்களை வேறு நிறுவனங்களுக்கு நடித்துக்கொடுத்தார்.
இதற்கிடையே, நடிகர் சூர்யா ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் முதல் தயாரிப்பாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் நவ. 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றியை இப்படம் மூலம் பெற வேண்டும் என்பதைத் தாண்டி புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என சூர்யா காத்திருக்கிறாராம்!
Expectations are rising for the film scene, starring actor Suriya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


