
சுதந்திர நாள் வெளியீடாக ஆக.15 ஆம் தேதி தங்கலான், டிமான்ட்டி காலனி - 2, ரகு தாத்தா ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியானது.
இதில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆனால், படத்தின் உருவாக்கமும் நடிகர்களின் பங்களிப்பும் ரசிகர்களை ஈர்த்துள்ளன.
அதேபோல், நடிகர் அருள்நிதி நடித்த டிமான்ட்டி காலனி - 2 திரைப்படமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிந்தித் திணிப்பு மற்றும் பெண் அடக்குமுறையைக் கேள்வி கேட்கும் வகையில் உருவான ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படங்கள் வெளியான மூன்று நாள்களில் உலகளவில் ஈட்டிய வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தங்கலான் ரூ. 53.64 கோடியும், டிமான்ட்டி காலனி - 2 ரூ. 10.5 கோடியும் ரகு தாத்தா ரூ. 45 லட்சமும் வசூலித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.