ரஜினியுடனான போட்டியிலிருந்து பின்வாங்கும் சூர்யா?
கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
.jpg)
வேட்டையன் வெளியீட்டுத் தேதி போஸ்டர்.
ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினி நடிக்கும் படமென்பதால், தமிழகத்தில் ரஜினியின் படத்தை வாங்கவே விநியோகிஸ்தர்கள் முயல்வார்கள். மேலும், இப்படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி என மொழிக்கு ஒரு நட்சத்திர நடிகரை வைத்திருப்பதால் பான் இந்தியளவில் வேட்டையன் படத்தின் வியாபாரமே ஓங்கும்.
அதேநேரம், பெரிய பட்ஜெட்டில் உருவான கங்குவா திரைப்படம் வெளியானால் இப்படமே பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை மாற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...