புஷ்பா - 2 டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடிகளா?

புஷ்பா - 2 டிக்கெட் முன்பதிவிலேயே இத்தனை கோடிகளா?

புஷ்பா - 2 முன்பதிவு தீவிரம்....
Published on

புஷ்பா - 2 திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு வாயிலாகக் கிடைத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா உள்ளிட்ட சில பகுதிகளில் டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்து திரையிடப்படுகிறது.

கிட்டத்தட்ட 12,000 திரைகளில் வெளியாகும் படமென்பதால் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்படம் உலகளவில் டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா - 2 வெளியாக இன்னும் 3 நாள்கள் இருக்கும் நிலையில் இப்போதே வசூல் நிலவரங்கள் வரத்தொடங்கியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக இது இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com