ஒவ்வொரு மூச்சும் ஒரு துவக்கம்: ஓவியா

ஓவியாவின் புதிய புகைப்படம்...
ஓவியா
ஓவியா
Published on
Updated on
1 min read

நடிகை ஓவியா தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் முழு கவனத்தையும் பெற்றவராக இருந்தார். களவாணி படத்தின் மூலம் அழகான நாயகியாக அறிமுகமானர், தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். கலகலப்பு, மதயானைக்கூட்டம் படங்களில் நல்ல நடிப்பையும் வழங்கியிருந்தார்.

ஆனால், சினிமாவில் கிடைத்த புகழெல்லாம் ஒன்றுமில்லை என்கிற அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு மிகப் பெரிய வெளிச்சம் கிடைத்தது. பல லட்சம் ரசிகர்கள் ஓவியாவை பாராட்டிக்கொண்டிருந்த நாள்கள் அவை.

பிக்பாஸுக்குப் பின் 90 எம்எல் என்கிற படத்தில் நடித்தார். அப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. சினிமாவின் கணக்குகள் புரியாது என்பதுபோல், இப்போது மொத்தமாக மார்க்கெட் இழந்த நடிகையாக இருக்கிறார். தற்போது, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சில நாள்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் ஓவியாவின் ஆபாச விடியோ என ஒரு விடியோ பகிரப்பட்டது. அந்த விடியோவில், பெண்ணின் கையில் டாட்டூ இருந்ததால் ஓவியாதான் என ரசிகர்கள் இந்தியளவில் அவரை வைரலாக்கியதுடன் அந்த விடியோ அதிகளவில் பரப்பப்பட்டது.

இதுகுறித்து ஓவியா தரப்பிலிருந்து காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், யோகா செய்வதுபோல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “ஒவ்வொரு மூச்சும் ஒரு புதிய துவக்கம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com