கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

இந்தியன் - 3 திரையரங்குகளில் வெளியாகும்: ஷங்கர்

இந்தியன் - 3 குறித்து இயக்குந ஷங்கர்...

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:42 am

DIN

இந்தியன் - 3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதுடன் கடுமையான இணைய கிண்டல்களை எதிர்கொண்டது. ஆனாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதனால், இயக்குநர் ஷங்கர் இந்தியன் - 3ல் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட காட்சிகளில் சிலவற்றை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் சில நாள்கள் படப்பிடிப்பை நடத்தும் முடிவில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

மேலும், இந்தியன் - 3 படத்தை நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர், ”இந்தியன் - 2 படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் அதிர்ச்சியளித்தன. அதைக் கருத்தில்கொண்டு இந்தியன் - 3 படத்தை சரிசெய்வேன். மூன்றாவது பாகம் திரையரங்குகளில்தான் வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.