பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

மறுவெளியீடாகும் தாம் தூம்! தேதி அறிவிப்பு!

தாம் தூம் திரைப்படம் மறுவெளியீடாகிறது...

ரவி மோகன், ராய் லஷ்மி - www.tkada.com

Published On :

நடிகர் ரவி மோகனின் தாம் தூம் திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடாகிறது.

நடிகர் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்” திரைப்படம் அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் தருணங்கள் ஆகியவை அன்றைய இளம் தலைமுறையை மிகவும் கவர்ந்தன.

இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது, ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

Story image

மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான “தாம் தூம்” படம், வணிக அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக அமைந்தது.

இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் மறுவெளியீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.