அல்லு அர்ஜுன் விவகாரம்: இசையமைப்பாளர் தேவா கருத்து!

நடிகர் அல்லு அர்ஜுன் விவகாரத்தில் இசையமைப்பாளர் தேவா கருத்து..
இசையமைப்பாளர் தேவா
இசையமைப்பாளர் தேவா
Published on
Updated on
2 min read

மதுரை: புஷ்பா 2 சிறப்பு திரையிடல் சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்ட வழக்கு குறித்து இசையமைப்பாளர் தேவா கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி ஒத்தக்கடை அருகே உள்ள வேலம்மாள் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் தேவா கூறுகையில்:

"மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது எனது பாடல் "வராரு வராரு அழகர் வாராரு" ஒலித்துக் கொண்டே இருக்கும், அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.

இந்த இசைக் கச்சேரியை 60 பேர் கொண்ட இசைக் குழுவினருடன் இணைந்து நடத்த உள்ளேன். 5 முதல் 6 மணி நேரம் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன்.

எனக்கு அனிருத் மிகவும் பிடிக்கும், அவர் லேட்டஸ்ட்டாகவும் வேகமாகவும் இருக்கிறார்.

எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் நடிக்க விருப்பமில்லை. இசைப் பணிகள் நிறைய இருப்பதால் நடிக்க விரும்பவில்லை.

தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களின் இசை பிடிக்கவில்லை என்றால் தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். எனக்கு அனைவரின் இசையும் பிடிக்கத்தான் செய்கிறது.

சூரியன் படத்தில் கந்த சஷ்டி கவசம் பாடலை, 18 வயதில் பாடலைப் போல சேர்த்து இசையமைத்தேன். கதைக்கு ஏற்றது போன்று சேர்க்கப்படுகிறது, ஆனால் அதை காப்பி அடித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்றார்.

ஹைதராபாத்தில் புஷ்பா - 2 திரையிடலின்போது அல்லு அர்ஜுனை காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை குறித்த கேள்விக்கு, இதுபோன்ற சம்பவங்கள் நிறைய நடந்துள்ளது, யார் மீது குற்றம் என்று இதுபோன்ற சம்பவங்களில் கூற முடியாது என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பு நடைபெறவில்லை அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்.

இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்கள் நன்றாக இசை அமைக்கின்றார்கள். அவர்களுக்கு கூறுவதற்கு எதுவும் கிடையாது. ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இளம் இசையமைப்பாளர்கள் பணத்தை சேமித்து வைத்து வரும் காலத்திற்கு தேவையானவற்றை சேமிக்க வேண்டும்.

எனது பாடல் 35 ஆண்டுகளுக்கு பிறகும் தற்பொழுதும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன்.

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்ற விருப்பப்படுகிறேன். அந்த ஆதங்கமும் எனக்கு இருக்கிறது அதற்காக காத்திருக்கிறேன்.

இசைமையைப்பாளர்கள் நடிகராக மாறுவது அவர்களின் தனித்திறமை" எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com