
பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் இரண்டாவது சீசன் இன்று ஓடிடியில் வெளியாகிறது.
பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேம் பாகம் 1 வெளியானது.
இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள்.
இதையும் படிக்க: விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!
அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் யூகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. சமீபத்தில், இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில், இத்தொடரின் இரண்டாவது சீசன் இன்று மாலை நெட்பிளிக்ஸ் ஓடிடிடில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







