ஓடிடியில் வெளியாகும் திகில் இணையத் தொடர்!
'தி ரீல் ஃபைல்ஸ்' சீசன் 4 இணையத் தொடர் குறித்து....

'தி ரீல் ஃபைல்ஸ்' சீசன் 4 இணையத் தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது. தற்போது பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடையும் சினிமா ஆந்தாலஜி தொடராக வெளியாகிறது.
மூன்றாவது சீசனில் பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் இணைந்ததுடன், உளவியல் ஜானரில் கதைக்களமும் இருந்தது. இதன் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள நான்காவது சீசனில் அப்துல் ரொசக், இப்ராஹிம் அல் சமாதி, ஜெனோபர் பாத்திமா மற்றும் ‘சாய் வித் அகமது’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகமது அல் மர்சூகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் தொடரை அப்ரா பர்ஹானா மற்றும் ஜெனோபர் பாத்திமா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், பாலிவுட் நடிகர் சோஹைல் கான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவர் படக்குழுவினருக்கும் டிரெய்லருக்கும் தனது வாழ்த்து தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் ஜெனோபர் பாத்திமாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், நிகழ்வின்போது அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார்.
நான்காவது சீசனில் புதிய கதைகளின் தொகுப்பு இடம்பெறவுள்ளது. இதில் முதல் கதையாக ‘தி கான்ஜர்’ வெளியாகவுள்ளது. இந்தத் தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஓடிடி தளம் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
The trailer for Season 4 of the web series 'The Reel Files' has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


