தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர் படப்பிடிப்பு தொடக்கம்! விரைவில் ஒளிபரப்பு!

போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வருவது தொடர்பாக...

police police

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் முதல்காட்சி. - படம்: எக்ஸ்

Published On :

போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

காவல் நிலையத்தில் போலீஸ் - திருடன் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவைக் கலந்து ஒளிபரப்பு செய்யப்பட்ட போலீஸ் போலீஸ் இணையத் தொடர் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடரில், மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்திருந்தனர்.

கோன், சிதம்பரம், மணிவண்ணன் என மூன்று இயக்குநர்கள் இந்த இணையத் தொடரை இயக்கியிருந்தனர். ஜேம்ஸ் விக்டர், சரண் ராகவன் என இருவர் இசையமைத்திருந்தனர்.

இந்த நிலையில், போலீஸ் போலீஸ் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது.

இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள், புதியவர்களும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் ஜியோ ஹாட் ஸ்டாரில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

Summary

Filming for the web series Police Police - 2 is currently underway, and reports indicate that it will be released soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.