ஹார்ட் பீட் நடிகையின் மேடம் போலீஸ்! ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

மேடம் போலீஸ் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

madam police

மேடம் போலீஸ் தொடரின் காட்சி. - படம்: எக்ஸ்

Updated On :

ஹார்ட் பீட் நடிகையின் மேடம் போலீஸ் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையம் மற்றும் காவலர்களை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஜியோ ஹாட்ஸ்டாரில் போலீஸ் போலீஸ் இணையத் தொடர் ரசிகர்களிடையே பிரபலமடைந்து, தற்போது இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஆஹா ஓடிடியில் தூள் பேட் போலீஸ் ஸ்டேசன் இணையத் தொடரும் ரசிகர்கள் ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில், சோனி விழா சேனலில் மேடம் போலீஸ் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் மேடம் சார் என்ற ஹிந்தி மொழி தொடரின் தழுவலாக எடுக்கப்படுகிறது.

பிக் பாஸ் பிரபலம் திவ்யா கணேஷ் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர் நடிகை பிரேமிகா சேகர், ஸ்ரீது கிருஷ்ணன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

புறநகர்ப் பகுதியில் இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி, நகைச்சுவை பாணியில் எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், மேடம் போலீஸ் தொடர் வரும் டிசம்பர் 14 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் 100 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The broadcast date for the 'Madam Police' series, featuring the 'Heartbeat' actress, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.