தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'தலையில் தட்டி சொல்லக்கூடிய விஷயங்கள் உள்ளது': ப்ளூ ஸ்டார் படக்குழு

அனைத்தும் சமம் என்பதை தலையில் தட்டி சொல்லக் கூடிய விஷயங்கள் இப்படத்தில் உள்ளது என்று ப்ளூ ஸ்டார் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

News image

படக்குழுவினர்

Updated On :3 பிப்ரவரி 2024, 7:59 am

DIN


கோவை : அனைத்தும் சமம் என்பதை தலையில் தட்டி சொல்லக் கூடிய விஷயங்கள் இப்படத்தில் உள்ளது என்று ப்ளூ ஸ்டார் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

ப்ளூ ஸ்டார் பட குழுவினர் கோவையில் ரசிகர்களை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களுக்கும் பேட்டியளித்துள்ளனர்.

ப்ளூ ஸ்டார் படத்தை இரண்டாவது வாரமாக மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், தற்போதும் 200 திரையரங்குகளுக்கு மேல் படம் ஓடுவது பெருமையாக உள்ளது என நடிகர் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

ப்ளூ ஸ்டார் திரைப்பட குழுவினர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் “ப்ளூ ஸ்டார்” படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் செல்வன் கூறும் போது, இரண்டாவது வாரமாக ப்ளூ ஸ்டார் படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் 200 திரையரங்குக்கு மேல் படம் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமல்லாமல் மற்ற திரையரங்குகளிலும் ப்ளூ ஸ்டார் படம் ஓடுவது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது.

குறிப்பாக எனது படம் வெளியாகும் போது நிச்சயமாக கோவையில் உள்ள திரையரங்கில் வந்து படம் பார்ப்பேன், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் ப்ளூ ஸ்டார் படத்திற்கும் கோவை மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். ப்ளூ ஸ்டார் திரையரங்கிற்காக உருவாக்கப்பட்ட படம்.

கொரோனாவிற்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துள்ளதாக நினைத்த நிலையில், தற்போது மீண்டும் மக்கள் திரையரங்கிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எனது மற்ற படங்களில் இல்லாத புதிய ரசிகர்களை பெற்றுள்ளேன்.மக்களோடு இணைந்துள்ளேன். திரைப்படத்தை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்தார்.

நடிகர் சாந்தனு கூறும் போது, ப்ளூ ஸ்டார் படத்திற்கு கோவை மக்கள் பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் அனைவருக்கும் அனைத்தும் சமம் என்பதை வலியுறுத்தும்.

பட இயக்குனர் பா ரஞ்சித் கூறியது போல நல்ல விஷயங்களுக்கு தடைகள் வரத்தான் செய்யும். அதனைத் தாண்டி நாம் செய்ய வேண்டும். மேலும் இந்தப் படம்  அனைத்தும் சமம் என்பதை தலையில் தட்டி சொல்லக்கூடிய விஷயங்கள் உள்ளது. அதற்கு மக்கள் பெரிய ஆதரவு தந்துள்ளனர் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.