ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அனுராக் காஷ்யப் தமிழில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகவும் இப்படத்தில் நாயகனாக ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: செர்பியாவில் தக் லைஃப் படப்பிடிப்பு!
இந்நிலையில், மலையாளத்தில் இயக்குநர் ஆசிக் அபு இயக்கத்தில் உருவாக உள்ள ’ரைஃபிள் கிளப்’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க அனுராக் ஒப்பந்தமாகியுள்ளார். இதுவே, அவரது முதல் மலையாளப் படமாகும். முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் சௌபின் சாகிர், திலீஷ் போத்தன் ஆகியோர் நடிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஜினி பற்றி பேசியதற்கு ஆதவ் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ராம்கி

எல்பிஜி: ஆதார் சரிபார்ப்பு கட்டாயமா? யாருக்கு? - மத்திய அரசு விளக்கம்!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - தவெக கூட்டணி?

சண்டீகரில் படமாக்கப்படும் ரஜினி - ஷாருக்கான் காட்சி?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

